மனைவி அனுஷ்கா சர்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூக ட்விட்டரில் வெளியிட்டு நீக்கியுள்ளார் விராட் கோஹ்லி.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

அனுஷ்கா சர்மா, கோஹ்லி
அனுஷ்கா சர்மா, கோஹ்லி

மேலும் அனுஷ்காவின் படத்திற்கு விளம்பரமும் தேடிக் கொடுக்கிறார்.

கடையின் சுவரில் ஒரு ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை பார்த்த கோஹ்லியும், அனுஷ்காவும் அதே போன்று செய்துள்ளனர். அந்த முத்த புகைப்படத்தை கோஹ்லி இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் வெளியிட்டார்.

மை ஒன் அன்ட் ஒன்லி என்று தலைப்பிட்டு ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டார் கோஹ்லி. புகைப்படம் வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 10 ஆயிரம் பேர் லைக் செய்தனர்.

கோஹ்லி, அனுஷ்கா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் க்யூட், காதல்னா இது தான் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

முத்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்டுவிட்டு சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார் கோஹ்லி. அந்த புகைப்படத்தில் தவறு எதுவும் இல்லையே, ஏன் நீக்கினீர்கள் என்று பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இப்படித் தான் இருக்க வேண்டும் என்று கூறி கோஹ்லி, அனுஷ்காவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி.