நடிகையாக தான் ஒரு சுயநலவாதி என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அதனால் தயாரிப்பாளர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்கள். தீபிகா நடித்தால் படத்திற்கு அதிக மவுசு என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் தீபிகா தனது திரையுலக பயணம் குறித்து கூறுகையில்,

நாங்கள் எல்லாம் ஒவ்வொரு படத்திலும் கடினமாக வேலை பார்க்கிறோம். ஒரு நடிகையாக நான் நிச்சயம் ஒரு சுயநலவாதி தான்.

நான் நடித்த பிக்கு ரிலீஸாகிவிட்டது. தற்போது தமாஷாவும் அடுத்ததாக பாஜிராவ் மஸ்தானி படமும் ரிலீஸாக உள்ளன. ஒரு நடிகையாக நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

வழக்கத்தை மாற்றி வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் தமாஷா. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூடையும் வித்தியாசமாக காண்பித்துள்ளோம் என நினைக்கிறேன் என்றார் தீபிகா.

தமாஷா படத்தில் தீபிகா தனது முன்னாள் காதலர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து நடித்துள்ளார். படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளது அதற்காகவே படம் ஹிட்டாகும் என்று கூறப்படுகிறது.