நடிகை சோனம் கபூர் தனது திருமணத்திற்கு எதிரியான தீபிகாவுக்கு பத்திரிகை வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை வரும் 29ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். முன்னதாக அவரின் திருமணம் சுவிட்சர்லாந்தில் நடக்கும் என்று கூறப்பட்டது.

பெரியம்மா ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் மகள்கள் ஜான்வி, குஷியை சோனம் கவனித்துக் கொள்கிறார். சோனம் தனது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து வருகிறார்.

சோனம் கபூருக்கும், நடிகை தீபிகா படுகோனேவுக்கும் ஆகவே ஆகாது. இருப்பினும் அவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார் சோனம். ஆனால் தீபிகா திருமணத்திற்கு வருவாரா என்பது கேள்விக்குறி.

உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தும் சோனம் தனது திருமணத்தன்று எந்த டிசைனர் வடிவமைத்த உடையை அணியப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தனுஷின் முதல் பாலிவுட் படத்தின் ஹீரோயின் சோனம் கபூர். அவரின் திருமணத்திற்கு தனுஷ் செல்வாரா?