“வீரே தி வெட்டிங்” படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

இயக்குநர் ஷஷங் கோஷ் இயக்கத்தில் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா ஆகியோர் நடித்திருக்கும் படம் “வீரே தி வெட்டிங்”. கரீனா கபூர், சோனம் கபூர் முன்னணி ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரேகா கபூர் தயாரிக்கிறார். இப்படம் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டடு என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு தோழிகளை மையப்படுத்திய காமெடி படமாக உருவாக்கி வருகிறது “வீரே தி வெட்டிங்”. படத்தின் ட்ரையிலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படம் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.