பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன் மருமகள் உடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் என்னும் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தற்போது ஹாலிவுட்டிலும் குவான்டிகோ சீரியலில் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியலில் இடப்பெற்றும் இந்தியாவின் முதல் நடிகை பிரியங்காதான் என்னும் பெயர் பெற்ற இவர் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது தன் மருமகள் பிறந்தநாள் அன்று அவருடன் எடுத்தக்கொண்ட புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பிரியங்காவின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக இருக்கும் இவர், விரைவில் பாரத் என்னும் படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத் திரைப்படமானது ஓட் டு மை பாதர் எனும் தென் கொரிய திரைப்படத்தின் தழுவல் ஆகும். 2019-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இத்திரைப்டமானது 70-களின் காலக் கட்டத்தில் நடைப்பெறும் கதையாக இருக்கும் என தெரிகிறது.

Baby princess..It’s the birthday girl.. @sky.krishna ❤💋

Et innlegg delt av Priyanka Chopra (@priyankachopra)