பாலிவுட் பிரபல தீபிகா படுகோனின் மொழுகுச் சிலை லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளது!

மேடம் டுசாட்ஸ் லண்டன் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகேன் சிலை வைக்கப்படுதற்கான பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் அடத்தாண்டு ஆரம்பத்தில் இவரது சிலை வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக தீபிகாவை சந்தித்த மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியக நிபுணர்கள் அவரை 200 கோணங்களுக்கு மேலான அளவுகளை எடுத்துள்ளனர். துள்ளியமான வடிவமைப்பினை அமைக்க பல்வேறு கோணங்களில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

இதுகுறித்து தீபிகா தெரிவிக்கையில்… “எனது மெழுகு சிலை உறுவாக்கம் குறித்து நிபுணர்களிடம் பேசிக்கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. என் வாழ்நாளில் இது ஒரு சிறப்பான அனுபவமாய் நான் இதை கருதுகின்றேன். எனது மெழுகு சிலைக்காக நான் காத்திருக்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறுவயதில் தன் பெற்றோருடன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு வந்து ரசித்துள்ளேன்., இப்போது அதே இடத்தில் எனது சிலையும் இடம்பெறவுள்ளது பெரும் மகிழ்சி அளிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், சச்சின் டெண்டுல்கர், ஆகியோரது சிலைகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது!