8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் மணிரத்னத்தின் ராவண் படத்தில் கடைசியாக ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

இந்நிலையில் குலாப் ஜாமூன் என்ற படத்தில் ஐஸ்வர்யா தனது கணவருடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நானும், அபியும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இந்த பட வாய்ப்பு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போதே சேர்ந்து நடிக்கும் ஐடியா பிடித்திருந்தது. ஆனால் அபி குட்டி பிரேக் எடுக்க விரும்பினார். அதன் பிறகு அவர் மன்மர்சியான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

தற்போது தான் குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதை மிகவும் அழகானது என்றார்.

ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து நடிக்க உள்ளனர்.