பாலிவுட் நடிகை திஷா பதானி தனது இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தோனி படம் மூலம் பிரபலமான திஷா பதானி பாகி 2 படம் ஹிட்டான பிறகு பாலிவுட்டில் முக்கியமான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். அவர் சல்மான் கானின் பாரத் படத்திலும் நடித்து வருகிறார்.

சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் சல்மான் படம் என்பதால் ஒப்புக் கொண்டுள்ளார்.

திஷா பதானி தனது காதலரான பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப் போன்று தினமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் பழக்கம் உள்ளவர். ஒர்க் அவுட் செய்து வாஷ்போர்ட் ஆப்ஸ் வைத்துள்ளார். தனது இடுப்பை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திஷா பதானி
திஷா பதானி

இடுப்பு புகைப்படம் மட்டும் அல்ல கவர்ச்சியான உடை அணிந்து ஒரு வீடியோ எடுத்து அதையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் திஷா. பாரத் படத்தில் திஷா சல்மானுக்கு ஜோடி அல்ல மாறாக சகோதரியாக நடிக்கிறாராம். இந்த படத்திற்காகவே அவர் தனது உடலை செம ஃபிட்டாக்கி வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கருப்பு நிற பிகினியில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் திஷா. அவர் பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவின் ஹீரோயினாக திஷாவை தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் படத்தை இன்னும் துவங்கவில்லை. அதனால் திஷா அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையே அவர் தேவையில்லாத கிசுகிசு ஒன்றில் சிக்கினார். இதை பார்த்த திஷாவின் காதலர் கோபம் அடைந்து விளக்கம் அளித்தார்.

 

Se dette innlegget på Instagram

 

🌸

Et innlegg delt av disha patani (paatni) (@dishapatani)