நடிகை சோனம் கபூர் சில மாதங்கள் முன்பு ஆனந்த் அஹுஜா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பலமுறை வைரலாகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கணவருடன் மிலன் பேஷன் வீக் விழாவுக்கு வந்திருந்த அவர் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

விழா நடந்த நாட்டில் இவ்வளவு கவர்ச்சி சாதாரண ஒன்று தான் என்றாலும், இந்திய ரசிகர்கள் பலரும் இந்த கவர்ச்சி உடை முகம்சுளிக்கும்படியாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.