பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி – ஆதித்ய சோப்ரா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. குச் குச் ஹோதா ஹை படம் மூலம் பிரபலமடைந்த ராணி முகர்ஜி, தமிழில் ஹேராம் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் திகழ்ந்தார். இவருக்கும் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதித்ய சோப்ராவுக்கும் ரகசிய காதல் இருந்துவந்தது.

தனது 36 வயதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆதித்யா சோப்ராவை ராணி முகர்ஜி இத்தாலியில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ராணி முகர்ஜிக்கு இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு ஆதிரா எனப் பெயர் சூட்டியுள்ளார்களாம். அதாவது இருவர் பெயர்களிலும் உள்ள முதல் எழுத்துக்களைச் சேர்த்து இந்தப் பெயரை வைத்துள்ளனர்.