அண்மையில் தனது 31வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி இருந்தார் தீபிகா படுகோனே.

அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த தீபிகா, என் பள்ளி பருவத்தில் தேசிய அளவில் பேட்மின்டன் விளையாடி இருக்கிறேன்.

மாடலிங் துறைக்கு வந்த பின், நடிக்க ஆசைப்பட்டு எனது படங்களைபிரபல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டேன்.

அவர்கள் இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா? நீ நடித்தால் யார் பார்ப்பார்கள் என்றெல்லாம் சொல்லி என்னை கிண்டல் செய்தனர். மனதை தளர விடாமல் பட கம்பெனிகளின் படிக் கட்டுகளில் ஏறி இறங்கினேன்.

தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்திருக்கிறேன் என்றார்.