அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், கத்ரீனா கைப் ஜோடியாக நடித்துள்ள படம் ஃபித்தூர். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்த இப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் கத்ரீனாவின் தலைமுடி சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டுமாம், இதனால் அவர் மும்பையில் தனது முடியை சிவப்பு நிறமாக்கும் நிபுணர்களை தேடியுள்ளார்.

மும்பையில் தனக்கு பிடித்த நிபுணர்கள் இல்லை என்பதால் லண்டன் சென்று தனது முடியை கலர் செய்துள்ளார்.

படம் முழுக்க சிவப்பு நிறமாக இருக்க வேண்டும் என்பதால் அவர் எடுத்த முயற்சியில், தலைமுடிக்கு மட்டும் ரூ. 55 லட்சம் செலவு செய்துள்ளார்.

அம்மாடியோ ஒரு தலைமுடிக்கா???