மும்பையின் அழகுப் பிசாசான பிபாஷா பாசு தான் திருமணம் செய்து கொள்ள அவசரப்படவில்லை என்று அதிரடி ஸ்டேட்மெண்ட் வெளியிட்டுள்ளார். 35 வயதாகும் பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு தனது சினிமா பயணத்தை 2001 ஆம் வருடத்தில் தொடங்கினார். முதல் முதலாக அஜ்னபி என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிபாஷா அதன் பின்னர், தூம் -2, ராஸ் என்று வெற்றிப் படங்களின் மூலமாக வெற்றியைக் குவிக்க ஆரம்பித்தார்.

பிபாஷா பாசு நடித்த ஆத்மா, ஹம்சகல்ஸ் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் கிரியேட்டர்- 3டி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் பிபாஷா பாசுக்கு தனது காதலர் ஹர்மன் பவேஜாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.

இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ள தான் அவசரப்படவில்லை என்றும் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ” திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு என்று நேரம் இருக்கிறது.நான் திருமணம் செய்து கொள்வேன்.

நான் செய்ய வேண்டிய படங்கள் உள்ளன. நடிப்பு தவிர பலவற்றை நான் சிந்தித்து வைத்து உள்ளேன். அதைப்பற்றி நான் கூற இயலாது” என்று கூறியுள்ளார்.