போதும், இதோட நிறுத்திக்குவோம்’ என்று வடிவேலு பாணியில் தன் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி கோபப்பட்டிருக்கிறார் அசின். இந்தியில் அவர் நடித்து வந்த படங்கள், விளம்பர தூதராக ஒப்புக்கொண்ட நிகழ்வுகள் எல்லாவற்றையும் முடிப்பதற்காக தொழில் அதிபர் ராகுல் சர்மாவுடனான திருமணத்தை தள்ளிப்போட்டுவந்தார், எல்லாவற்றையும் முடித்தபிறகு கடந்த ஜனவரி மாதம் ராகுலை மணந்தார். இத்துடன் தன்னைப் பற்றிய கிசுகிசுவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்தார் அசின். ஆனால் பாலிவுட் இதழ்கள் சிலவற்றில் அசின் மீண்டும் நடிக்க உள்ளார், விளம்பர தூதர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று கொளுத்திபோட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக்கண்டு கோபம் அடைந்த அசின் தனது இணைய தள பக்கத்தில் சூடாக பதில் அளித்திருக்கிறார்.

இதுவரை தகவல் கிடைக்கப்பெறதாத எல்லா மீடியா நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்லிக்கொள்வது என்னவென்றால். இதுவரை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எனது திருமணத்துக்கு முன்பே நான் முடித்துக்கொடுத்துவிட்டேன். இதில் விளம்பர தூதர் நிகழ்ச்சிகளும் அடங்கும். ஆனாலும் என்னைப் பற்றி யூகத்தில் சிலர் இன்னும் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாகவும், படங்களில் நடிக்க உள்ளதாகவும் எழுதி வருகின்றனர். தற்போதைய நிலையில் அதுபோன்ற வேலை எதையும் நான் செய்யவில்லை. இந்த அறிவிப்பை எனது திருமணத்துக்கு முன்பு கூட தெரிவித்திருந்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.