கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ள மஜ்தார் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒரு நிபந்தனை விதித்துள்ளார்.கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் கபீரும், சல்மானும் சேர்ந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர். அந்த படத்திற்கு மஜ்தார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.மஜ்தாரில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்குமாறு கபீர் தீபிகா படுகோனேவிடம் கேட்டுள்ளார்.

சல்மான் கானுடன் நடிக்கிறேன். ஆனால் படத்தில் என் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும். சும்மா வந்து தலையை காட்டிவிட்டு மரத்தை சுற்றி சுற்றி வந்து பாடி, ஆடுவதோடு முடிந்துவிடக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார் தீபிகா.