நடிகைகளின் ஆடைகள் சர்ச்சைக்குள்ளாகி வரும் காலம் இது. நடிகை தீபிகா படுகோனின் கிளீவேஜை ஒரு ஆங்கிலப் பத்திரிகை எடுத்துப் போட்டு கமென்ட் கொடுத்து சர்ச்சையானது. இதை தீபிகா கடுமையாக கண்டித்திருந்தார். பதிலுக்கு அந்தப் பத்திரிகையும் சில கருத்துக்களைக் கூறியிருந்தது. இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு புகாரைக் கூறியுள்ளார். ஒரு படத்தில் பாடல் காட்சியின்போது பிரியங்கா சோப்ரா தனது ஜட்டி தெரியும் வகையில் ஆட வேண்டும் என்று அப்படத்தின் இயக்குநர் தன்னைக் கேட்டுக் கொண்டதாக பிரியங்கா கூறியுள்ளார். இப்படி செய்வதன் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர முடியும் என்று அந்த இயக்குநர் காரணமும் கூறினாராம். ஒரு நடிகையிடம் இயக்குநர்கள் எந்த அளவுக்கு இறங்கிப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.

டிவிட்டரில் ஒரு பத்திரிகை சார்பில் அதன் ஆசிரியருடன் பிரியங்கா கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போதுதான் இந்த செய்தியை அவர் தெரிவித்தார்.

உங்களிடம் யாராவது மிகவும் சிறுமைத்தனமாக பேசியுள்ளனரா, கேட்டுள்ளனரா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா ஒரு படத்தின் பாடல் காட்சியின்போது எனது பேன்டீஸ் தெரியும் வகையில் ஆடுமாறு அந்தப் படத்தின் இயக்குநர் என்னைக் கேட்டுக் கொண்டதைத்தான் மிகவும் சிறுமையான செயலாக நான் கருதுகிறேன் என்றார் பிரியங்கா.

அந்த இயக்குநர் என்னிடம் அப்படிக் கூறியபோது நான் மனதளவில் மிகவும் காயப்பட்டேன். ஆனால் ஒரு இயக்குநர் என்பவர் ஒன்றைச் செய்யுமாறு கூறும்போது நடிகை என்ற வகையில் அதை கேட்க வேண்டியது எங்களது கடமை. அதேசமயம், ஒரு இயக்குநர் என்பவர் எந்த அளவுக்கு இறங்கிப் போகிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றார் பிரியங்கா.

அதேபோல பிரியங்கா கொடுத்துள்ள இன்னொரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்துள்ளார். நான் காதலுக்காக ஆள் தேடிக் கொண்டிருப்பதாக நடிகை பரினீதி சோப்ரா கூறியுள்ளார். உண்மை அதுவல்ல. எனக்கு நேரம் இல்லை. நான் யாரையும் தேடவும் இல்லை. மேலும் அது எனது தனிப்பட்ட வாழ்க்கை. அதில் உள்ள ரகசியங்கள் என்னோடு மட்டுமே இருக்க வேண்டும். ரசிகர்களுக்குக் கூட அது தெரியத் தேவையில்லை.

நான் எப்போதுமே சிங்கிளாக இருக்கிறேன் என்று கூறியதே இல்லை. மற்றவர்கள்தான் அப்படிக் கூறுகிறார்கள். நான் கூறியதில்லை. ஒருவேளை திருமணமாகாதவர்களை சிங்கிள் என்று கூறினால், அது சரி, அப்படியானால் நான் சிங்கிள்தான். மற்றபடி நான் சிங்கிள் இல்லை.

பெண்களை அதிலும் பிரபலமான பெண்களைச் சுற்றி கேமராக்கள் சுற்றியபடியேதான் உள்ளன நமது நாட்டில். அதிலும் பெண்கள் உட்காரும்போதுதான் அதிக அளவில் பிளாஷ்கள் பளிச்சிடும். குறிப்பாக அவர்களது உள்ளாடை தெரிகிறதா என்று ஆர்வத்துடன் கேமராக்கள் கவனிக்கின்றன. எனக்கும் நடந்துள்ளது, எனது தோழியர் பலருக்கும் நடந்துள்ளது. இப்போது தீபிகாவையும் குறி வைத்துள்ளனர். ஆனால் அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது, அதை அவர்கள் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார் பிரியங்கா.