தீபிகாவை பிறர் மதிக்க முதலில் அவர் தன்னை மதிக்க வேண்டும் என்று நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார். நடிகை தீபிகா படுகோனே நிகழ்ச்சி ஒன்றுக்கு கிளீவேஜை காட்டி வந்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. அதை பார்த்த தீபிகா டைம்ஸ் ஆப் இந்தியாவை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் விளாசினார். மேலும் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களின் ட்வீட்டையும் ரீட்வீட் செய்தார்.

தீபிகா செய்வதை பார்த்த டைம்ஸ் ஆப் இந்தியா, அவர் பத்திரிக்கைகளின் அட்டைப்படங்கள் மற்றும் போட்டோஷூட்டுக்கெல்லாம் உடம்பை காட்டத் தானே செய்கிறார். நாங்கள் செய்தி வெளியிட்டதற்கு மட்டும் எதற்காக போலியாக நடிக்கிறார் என்று கேட்டது.

தீபிகா ட்விட்டரில் டைம்ஸ் ஆப் இந்தியாவை விளாசியதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, அர்ஜுன் ராம்பல், தியா மிர்சா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

தீபிகா கிளீவேஜை ஓவராக காட்டி வந்தது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அவர் காட்டினால் பத்திரிக்கைகள் செய்தி வெளியிடத் தான் செய்யும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் தோழிகளாக இருந்து எதிரிகளாக ஆகினர் தீபிகாவும், நடிகை சோனம் கபூரும். இந்நிலையில் சோனமிடம் கிளீவேஜ் பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்றால் முதலில் நாம் நம்மை மதிக்க வேண்டும் என்று சோனம் கபூர் தீபிகா பிரச்சனை பற்றி தெரிவித்துள்ளார்.

சோனமிடம் பேசுகையில் உங்களின் தோழி தீபிகா படுகோனே என்று பத்திரிக்கையாளர்கள் கூற, அவரோ, அவர் என் தோழி என்று நான் ஒருபோதும் கூறியது இல்லை. அவர் ஒரு சக நடிகை. அவ்வளவு தான் என்றார்.