பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது உடல் எடை குறித்து விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். பென்சில் போன்ற உடம்பு வைத்துள்ள பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்று இருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி பூசினாற் போன்று இருக்கும் நடிகைகளில் ஒருவர் லிங்கா நாயகி சோனாக்ஷி சின்ஹா. குச்சி, குச்சியாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சோனாக்ஷியை பார் உருண்டு கொண்டிருக்கிறார் என்று பலர் விமர்சித்து வந்தனர்.

தன் உடல் எடையை பற்றி விமர்சிப்பவர்களை சோனாக்ஷி கண்டுகொள்ளாமல் அவர் பாட்டுக்கு இருந்தார்.

விமர்சகர்களின் தொடர் விமர்சனத்தால் எரிச்சல் அடைந்த சோனா இன்ஸ்டாகிராமில் ஒரு எலும்புக்கூட்டின் படத்தை போட்டு நான் இது போன்று ஒரு நாளும் ஆக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

என்னை விமர்சிக்கும் முட்டாள்கள் நான் அவர்களை பார்த்து எந்த விரலை(நடுவிரல்) தற்போது காட்டுகிறேன் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் சோனா.

சோனாக்ஷிக்கு பெரிய நெற்றி இருப்பதால் அதை பற்றியும் பலர் கிண்டல் செய்கிறார்கள். கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு சோனாவுக்கு பெரிய நெற்றி என்று பலர் நக்கல் செய்தும் அதை எல்லாம் காதில் வாங்காத தில்லான நடிகை சோனா.

சல்மான் கானின் தபாங் படம் மூலம் தான் சோனா நடிகை ஆனார். அந்த படத்தில் நடிக்க அவர் 30 கிலோ எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...