ஆமீர் கானை அடுத்து பி.கே. பட போஸ்டருக்காக அனுஷ்கா ஷர்மா கையில் டிரான்சிஸ்டருடன் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறாராம். பி.கே. என்ற இந்தி படத்தில் ஆமீர் கான் நடித்து வருகிறார். படத்தின் கதை என்பதை அறிந்து கொள்ள யாரும் முயற்சிக்கவில்லை. ஆனாலும் பி.கே. பட்டிதொட்டி எல்லாம் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. காரணம் ஆமீர் கான் கையில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது தான். நிர்வாண போஸ் கொடுத்து பலரின் கண்டனத்திற்கு ஆளானார் ஆமீர்.

முதல் போஸ்டருக்கே இப்படியா அடுத்த போஸ்டரில் கையில் டிரான்சிஸ்டரும் இருக்காது என்று கூறி ஆமீர் பீதியை கிளப்பினார்.

அடுத்த இரண்டு போஸ்டர்களில் ஆமீர் கூறியது போல் அவர் கையில் டிரான்சிஸ்டர் இல்லை மாறாக டிரம்பெட் இருந்தது. ஆனால் ஆமீர் உடல் முழுவதையும் மறைக்கும்படி உடை அணிந்திருந்தார்.

ஆமீர் நிர்வாண போஸ் கொடுத்த பரபரப்பு தற்போது தான் சற்று அடங்கியுள்ளது. அதற்குள் பி.கே. படத்தில் நடிக்கும் அனுஷ்கா ஷர்மா புது புயலை கிளப்பியுள்ளார்.

பி.கே. படத்தின் 4வது போஸ்டருக்கு ஆமீரை போன்றே தானும் நிர்வாணமாக கையில் டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கப் போவதாக அனுஷ்கா அறிவித்துள்ளார்.

நடிப்பில் போட்டி போடலாம். நிர்வாணமாக போஸ் கொடுப்பதில் கூடவா? பாலிவுட்டில் அனுஷ்கா ஷர்மாவின் மார்க்கெட் நிலவரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நிலையில் அவர் இப்படி ஒரு முயற்சியில் இறங்குகிறார்.