ஈரான், பிரெஞ்ச் படங்களில் நடிக்கணும்… தீபிகா படுகோனேவின் வித்தியாசமான ஆசை

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேக்கு ஈரான் அல்லது பிரெஞ்சுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம்.

பொதுவாகவே நடிகர், நடிகர்களுக்கு பிற மொழிப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதிலும் நடிகைகள் இதில் கூடுதலாகவே ஆர்வமுடன் காணப்படுவர். பெரும்பாலும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் படங்களில் நடிக்கும் நடிகைகள், அடுத்த கட்டமாக பாலிவுட் செல்ல ஆசைப் படுவர். பின்னர், ஹாலிவுட் செல்ல ஆசைப் படுவர்.

ஆனால், இவர்களில் இருந்து மிகவும் வித்தியாசப் பட்டுள்ளார் நடிகை தீபிகா படுகோனே.

28 வயதாகும் தீபிகா படுகோனே நடித்து வெளியான படங்கள் அனைத்தும் வசூல் மழையைப் பொழிந்துள்ளன. எனவே, அவரது கால்ஷீட்டிற்காக நடிகர்களும், இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஈரான் மற்றும் பிரெஞ்ச் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இத்தகவலை நேற்று மும்பையில் நடைபெற்ற 16வது திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது அவர் கூறினார்.

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்திய சினிமாக்களை விட பிரெஞ்சு படங்கள் அழகானவை. எனக்கு சரியான வாய்ப்பு அமைந்தால் பிரெஞ்சுப் படங்களில் நடிகத் தயாராக இருக்கிறேன்.

பிரெஞ்சுப் படமான ‘ப்ரைஸ்லெஸ்’ என்னுடைய பேவரிட் படங்களில் ஒன்று. பிரெஞ்சுப் படங்களைப் போலவே ஈரானிய சினிமாக்களையும் நிறைய நான் பார்த்து வியந்துள்ளேன்.

பிரெஞ்ச் மற்றும் ஈரானிய மொழிப் படங்களில் எந்தெந்த இயக்குநர்களின் படங்களில் நடிக்கலாம் என ஒரு லிஸ்ட் நான் தயாரித்து வைத்துள்ளேன்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வரும் 24ம் தேதி ஷாரூக்கான் ஜோடியாக தீபிகா நடித்த ஹேப்பி நியூ இயர் படம் ரிலீசாகவுள்ளது. தற்போது அப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீபிகா பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...