நான்கே நாட்களில் ரூ 200 கோடி வசூலைத் தொட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது ஹேப்பி நியூ இயர்.

ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘ஹேப்பி நியு இயர்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் 5000 க்கும் அதிகமான அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டன.

படம் வெளியான 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளதாம். சல்மான்கானின் ‘ஜெய் ஹோ’ அக்ஷய்குமாரின் ஹாலிடே படங்கள்தான் இதுவரை அதிகம் வசூல் ஈட்டிய படங்களாக இருந்தன.

அந்த சாதனையை ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ படம் முறியடித்துவிட்டதாம்.