நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார். மிஸ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சஞ்சை குப்தா இயக்குகிறார்.

இது குறித்து ஐஸ்வர்யா ராய் மும்பையில் அவர் அளித்த பேட்டி:

நான் கடைசியாக குஜாரிஷ் இந்திப் படத்தில் நடித்தேன். 2010 – ல் இப்படம் வெளியானது.

அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஓரிரு விளம்பர படங்களில் மட்டும் நடித்தேன். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன்.

நான்கு வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சஞ்சய் குப்தாவின் ‘ஜாஸ்பா’ என்ற படத்தில் நடிக்க வருகிறேன். அடுத்த வருடம் ஜனவரியில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

குடும்பத்தினர் நான் மீண்டும் நடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எனவே தான் நடிக்கிறேன். இது தவிர மேலும் பலர் கதை சொல்லி உள்ளனர். அவற்றில் சில கதைகள் எனக்கு பிடித்து இருந்தது. அந்த படங்களில் நடிக்கவும் சம்மதம் சொல்லப் போகிறேன்.

அடுத்த வருடம் நான் பிசியான நடிகையாக இருப்பேன். எனது மகள் ஆரத்யாவுக்கு வருகிற 16-ந்தேதி 3 வயது ஆகிறது. மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளேன். -இவ்வாறு ஐஸ்வர்யா ராய் கூறினார்.