பிரியங்கா சோப்ராவின் குடும்பத்தில் ஏகப்பட்ட சகோதரிகள்.. அதாவது ஒன்று விட்ட சகோதரிகள்.

அதில் புதியவராக மனாரா என்பவர் பாலிவுட்டில் தொபுக்கடீர் என குதித்துள்ளார்….! பார்க்க க்யூட்டாக, அழகாக, பரம சாது போலத்தான் இருக்கிறார் இந்த மனாரா.. ஆனால் இவர் ஸித் (Zid) படத்தில் காட்டியுள்ள கவர்ச்சியோ குதூப்மினாரை மிஞ்சுவதாக உள்ளது.

சும்மா சொல்லக் கூடாது.. ஸித் படத்தில் புகுந்து விளையாடியுள்ளார் மனாரா. கொடுத்த பாத்திரத்தை பக்காவாக செய்துள்ளார் மனாரா என்று அக்கா பிரியங்கா சோப்ராவும் வாயாரப் புகழ்ந்துள்ளார்.

ஸித் படத்தின் இசை வெற்றி விழாவில் பிரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்கச்சியைப் புகழ்ந்து பேசினார்.

எங்களுக்கெல்லாம் ரொம்பச் செல்லமானவர் மனாரா. சுதந்திரமானவர்.தன்னைப் பற்றிக் கவலையே பட மாட்டார். முதல் முறையாக அவரை நடிகையாக பார்க்கிறேன்.

நிச்சயம் நடிப்பு கடினமானது. ஆனால் தன் மீதான நம்பிக்கையை அவர் வென்றுள்ளார், நியாயப்படுத்தியுள்ளார், காப்பாற்றியுள்ளார்.

அவர் ஏற்றிருப்பது மிகவும் சிக்கலான ரோல்தான். ஆனாலும் சரியாக செய்திருக்கிறார். சந்தோஷம் என்றார் பிரியங்கா.

இப்படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகள், கவர்ச்சிக் காட்சிகள், லிப் லாக் என ஏகப்பட்ட கசா முசாக்கள் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் படு துணிச்சலாக அசத்தியுள்ளார் மனாரா.

மனாரா குறித்து மேலும் பிரியங்கா கூறுகையில், இது மனாராவுக்கு முதல் படம். எனவே நிறைய காட்சிகள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் அதை அழகாகச் செய்துள்ளார் மனாரா. இதில் அவர் தன்னை ஸ்டிராங்க் ஆக நிரூபித்துள்ளார். பென்டாஸ்ட்டிக் என்று கூறியுள்ளார் பிரியங்கா.

மனாரா கூறுகையில், எனது திறமையால்தான் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது. அக்காவின் பெயரைச் சொல்லி நான் வாங்கவில்லை. அவரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை.

படம் குறித்து அக்காவுடன் முன்பே டிஸ்கஸ் செய்தேன். அதன் பிறகே முடிவெடுத்தேன். நான் பிரியங்காவின் தங்கச்சி என்பதற்காக யாரும் எனக்கு படம் தர மாட்டார்கள். எனது திறமை மீது நம்பிக்கை இருந்தால்தான் தருவார்கள்.

ஸித் படத்தின் கதையைக் கேட்ட அக்கா, இதில் நீ நடிக்கலாம் என்று கூறிய பிறகுதான் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார் மனாரா.

ஸித் ஒரு செக்ஸியான திரில்லர் படமாகும். இதில் மனாரா, கரன்வீர் சர்மாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். விவேக் அக்னிஹோத்ரி படத்தை இயக்கியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் இன்னொரு கசின் பரினீதி சோப்ரா. ஆனால் இவரும், பிரியங்காவும் சரிவர பேசிக் கொள்வதில்லை. அதேசமயம், மனாராவும், பரினீதியும் நெருக்கமான நட்போடு இருக்கிறார்களாம். அம்பாலாவுக்குப் போகும்போதெல்லாம் பரினீதியைப் பார்க்காமல் வர மாட்டாராம் மனாரா.

நான் அம்பாலா போய் விட்டால் ஒரே ஆட்டம் பாட்டம்தான். பரினீதி மற்றும் பிற சகோதர சகோதரிகள் போடும் ஆட்டத்தால் வீடே இரண்டாகி விடும்.

எங்க குடும்பங்களில் (அதாவது அம்மா, சித்தி, பெரியம்மா இப்படி) மொத்தம் 14 சகோதர, சகோதரிகள் உள்ளனர். அத்தனை பேரும் பாசக்காரர்கள். சேர்ந்தாலே திருவிழாதான். டிப்பிக்கல் பஞ்சாபிக் குடும்பம் எங்களுடையது என்றார் மனாரா.

Loading...