‘ஏக் பஹேலி லீலா’ படத்தில் 100 லிட்டர் பாலில் சன்னி லியோன் குளிப்பது போல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட நீலப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்த இவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. தற்போது இந்திப்படங்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றில் நடனம் ஆடினார். தெலுங்கிலும் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். இவர் நடித்த ‘ஏக் பஹேலி லீலா’ இந்திப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் யுடியூப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்றது. பாபிகான் இயக்கியுள்ள இப்படம் மறுபிறவியைக் கதைக்களமாகக் கொண்டது.

இப்படத்தில் ராணி கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார். கதைப்படி, சன்னி லியோன் பாலில் குளிப்பது போன்ற காட்சி ஒன்று ராஜஸ்தானில் படமாக்கப் பட்டுள்ளது.

குளிர்காலத்தில் படமாக்கப் பட்ட இக்காட்சிக்காக 100 லிட்டர் பாலில் சுடுதண்ணீர் கலந்து சன்னி லியோன் குளிப்பது போல் படமாக்கப் பட்டுள்ளதாம். இக்காட்சி படத்தில் பாடல் ஒன்றில் இடம் பெற்றுள்ளதாம்.

இந்த பாடல் காட்சிக்காக சன்னி லியோனுக்கு சிறப்பு நடன பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பாடல் ஐஸ்வர்யாபச்சன் மற்றும் சல்மான்கான் நடித்த ‘ஹம் தில் தே சோக் சனம்‘ படத்தில் வரும் ‘தோலி தேரா தோல் பாஜே…’ என்ற பாடலின் ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பட அனுபவம் குறித்து சன்னி லியோன் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு சவாலான வேடம் கிடைத்து உள்ளது. படத்தில் எனக்கு 6 மணி நேரம் மேக் அப் செய்யப்பட்டது.

கதையை படித்து பார்க்கும் போதே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தில் வரும் லீலா வேடத்திற்காக 2 முதல் 3 மணி நேரம் செலவிட வேண்டி இருந்தது. முதல் நாள் 6 மணிநேரம் ஆனது.

இந்த படத்தில் எனக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைக்கும். வசனம் மிக கடுமையாக உள்ளது. இருந்தாலும் நல்ல பயிற்சி எடுத்து பேசுகிறேன். இதை மக்கள் பார்த்து ரசித்தால் இதில் பட்ட சிரமம் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.