புகைப்படத்தை வைத்து படத்தை முடிவு செய்யாதீர்கள், நடிகை சோனா!

நடிகை சோனா மிருகம், கோ, ஷாஜகான் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் அறியப்பட்டவர். குரு என் ஆளு படத்தில் விவேக்குடன் இணைந்து இவர் காமெடியில் கலக்கியது அனைவரும் அறிந்ததே.

புகைப்படத்தை வைத்து படத்தை முடிவு செய்யாதீர்கள், நடிகை சோனா!
சோனா

நடிகை சோனா மிருகம், கோ, ஷாஜகான் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் அறியப்பட்டவர். குரு என் ஆளு படத்தில் விவேக்குடன் இணைந்து இவர் காமெடியில் கலக்கியது அனைவரும் அறிந்ததே.

இவர் மீது எப்போதும் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை இருந்து வந்தது, இந்நிலையில் சோனா இனி கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லை, கதைக்கு தான் முக்கியத்துவம் என்று கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து பச்சமாங்கா என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தில் இவரின் உடையை பார்த்த அனைவரும் மீண்டும் கவர்ச்சி நடிகை என கூறினர்.

இதற்கு சோனா ‘தயவுசெய்து புகைப்படத்தை வைத்து படத்தை முடிவு செய்யாதீர்கள், கேரளா பெண்களின் உடையை தான் அணிந்துள்ளேன்.

இது பாலுமகேந்திரா சார் படம் போல் ஒரு க்ளாஸிக்கான படமாக தான் இருக்கும், நீங்களே படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவீர்கள்’ என்று கூறியுள்ளார்.