வருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்! ஓவியா பதிலடி

நடிகை ஓவியா எப்போதும் ஓப்பனாக தன்னுடைய கருத்தை கூறுபவர். அதற்காகவே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோது ஆர்மி துவங்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக அளவில் ரசிகர்களா இருந்தனர்.

வருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்! ஓவியா பதிலடி
ஓவியா

நடிகை ஓவியா எப்போதும் ஓப்பனாக தன்னுடைய கருத்தை கூறுபவர். அதற்காகவே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோது ஆர்மி துவங்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக அளவில் ரசிகர்களா இருந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கையேடு தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றினார் ஓவியா. தன் முடியை கேன்சர் பாதித்தவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாக கூறினார் ஓவியா.

அப்போது இருந்தே ஓவியா முடியை நீளமாக வளர்க்காமல் ஒரே விதமான ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். இதை சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவியா, "நான் மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல" என கூறியுள்ளார்.

மேலும் அடுத்த ட்விட்டில் “வருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் அவர்.