ரஜினிக்கு தாடி வச்சது ஏன்? துப்பாக்கி போல் தர்பார் இல்லை- ஏ.ஆர்.முருகதாஸ்

முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வசூலை பெறும்.

ரஜினிக்கு தாடி வச்சது ஏன்? துப்பாக்கி போல் தர்பார் இல்லை- ஏ.ஆர்.முருகதாஸ்
முருகதாஸ்

முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் வசூலை பெறும்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது, இதற்காக ஒரு வார இதழில் பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் இவர் ‘பலரும் போலிஸ் எப்படி தாடி வைக்க முடியும் என்று கேட்பார்கள், ஆனால், ரஜினி சார் இதில் ஒரு உயர் அதிகாரியாக நடிக்கின்றார்.

அதனால், பல போலிஸாரிடம் பேசி 4 ஸ்கெட்ச் பண்ணியிருக்கின்றோம், மேலும், மும்பை பின்னணியில் நடப்பதால் படத்தில் துப்பாக்கி போல் தீவிரவாதம் இருக்காது.

அதே நேரத்தில் ஒரு புதிய விஷயம் இப்படத்தில் இருக்கும், எபிசோட் எபிசோடாக கதை நகர்ந்து ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்’ என்று கூறியுள்ளார்.