கழுகு படத்துக்கு பின் இயக்குனர் சத்திய சிவா இயக்கிய படம் சிவப்பு . போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் கதை.

மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இதில் சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம்…’ என்று கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் பாடலை ஹரிஹரன்பாடியிருக்கிறார். வரும் 16ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடல் வரிகள்

Sivappu Tamil Movie Stills
Sivappu Tamil Movie Stills

பல்லவி

 • சடுகுடு விழியில் சுடுகிற மயக்கம் – என்
 • விடுகதை இரவு விடிவதை மறக்கும்
 • போர்க்கள பூமி வீசியெறிந்த
 • பூக்களில் ஒன்று பேசியதின்று
 • உனை சாய்த்த பள்ளங்களை
 • நிறைவாக மூடுகிறேன் – நீ
 • என் மனதோரம் நடந்துவர
 • ஒருவழிச்சாலை போடுகிறேன்
 • உயிரின் கனிகள் உனதடி – உன்
 • கண்ணீர் துளிகள் எனதடி

சரணம் 1

 • மாயப் பெண்மையே தேடித் தேடி உனை
 • தீயில் தள்ளியே மறைந்தேனே
 • கண்கள் கண்டதொரு ஈரக்காட்சியால்
 • மண்டை நரம்புகள் நனைந்தேனே
 • அகதிக்கூடாரம் கடந்துவந்து என்
 • சகதி மனவெளியில் விழுந்தாயே
 • சகதி மனவெளியைப் புல்வெளியாக்கி
 • சிதறு பூக்களாய் நடந்தாயே
 • ஈழ தேவதை வாழ வாழவே
 • தூய பாவங்கள் நான் புரிவேன்
 • விடியல் கீற்றினில் விசிறிகள் செய்து
 • அடிமைக் காயங்கள் ஆற்றிடுவேன்
 • உயிரின் கனிகள் உனதடி – உன்
 • கண்ணீர் துளிகள் எனதடி

சரணம் 2

 • பாவை முன்னேறும் பாதை எங்கிலும்
 • பாவி முட்களைப் பொழிந்தேனே
 • காலம் காணாத கவிதை ஒன்றை
 • கப்பல் செய்திட நினைந்தேனே
 • வான மாளிகை தானனுப்பிய
 • மொத்த கர்வமென மொழிந்தேனே – உன்
 • சின்ன குடிசையில் ஒளிந்து கிடக்கும்
 • யுத்த சத்தங்கள் அறியேனே
 • நானறியாமல் என் சிறுமீசை
 • உந்தன் வாசலில் மண்டியிடும்
 • எனை கேட்காமல் என் குடை இனிமேல்
 • உனையும் உனையும் உள்ளடக்கும்
 • உயிரின் கனிகள் உனதடி – உன்
 • கண்ணீர் துளிகள் எனதடி.
Loading...