எம்.எஸ். ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் வினோத் கிஷன், டேனியல் பாலாஜி, சசிகுமார், மிஷா கோஷல், நீலிமா ராணி என பல பிரபலங்கள் நடிக்க தயாராகி இருக்கும் படம் யாழ்.

வித்தியாசமாக தயாராகி இருக்கும் இப்படத்தின் கதை முழுவதும் இலங்கையிலேயே நடக்கிறது. இப்படம் யாழ் இசையும், கலையும், கலாசாரமும் சம்மந்தப்படுத்தி

கதாபாத்திரங்களுக்கிடையே நட்பு, காதல் போன்ற உணர்வுகளை வைத்து எடுக்கப்பட்டதாக படக்குழு கூறியுள்ளனர். தமிழர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் யாழின் சிறப்பு பற்றியும் யாழ்ப்பாணம் உருவான கதையும் மிகவும் அழகாக படத்தில் கூறப்பட்டுள்ளதாம்.