தளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா? இறுதியாக வாய்திறந்த ராஷ்மிகா!

விஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொள்ளும். தற்போது அட்லீயின் பிகில் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸான ஒரு படத்தில் நடிக்கிறார்.

தளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா? இறுதியாக வாய்திறந்த ராஷ்மிகா!
ராஷ்மிகா மந்தனா

விஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொள்ளும். தற்போது அட்லீயின் பிகில் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸான ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா மந்தனா தேர்வாகியிருப்பதாக செய்திகள் சில வாரங்கள் முன்பு வெளியானது. ஆனால் அது பற்றி அவரிடம் பேட்டிகளில் கேட்கப்பட்டபோது அவர் சரியாக பதில் அளிக்காமல் நழுவினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தனக்கு விஜய்யுடன் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.