சிம்பு காதல் தோல்வியால் மிகவும் மனமுடைந்து இருக்கிறார். இவரின் சொந்த வாழ்க்கை பிரச்சனை சினிமா வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.

ஆனால், தற்போது கொஞ்சம் சுதாரித்து செல்வராகவன், கௌதம் மேனன் படம் பிஸியாக விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கேத்ரின் நடிக்கவுள்ளார்.

இதே போல் கௌதம் மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் முதலில் பல்லவி நடித்து கால்ஷிட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து விலகினார். தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஒரு வடக்கம் செல்பி படத்தில் ஹீரோயின் மஞ்சிமா மோகன் தான் சிம்புவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.