பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகை?

பாகுபலி இந்திய சினிமாவில் மிகப்பெரிய வசூல் புரட்சியை செய்து விட்டது. இதை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதி படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. முதலில் இக்கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதேவியை தான் நடிக்க அணுகியுள்ளனர். அவர் முடியாது என்று சொல்ல, வாய்ப்பு ரம்யா கிருஷ்ணனுக்கு வந்தது.

தற்போது மீண்டும் இரண்டாம் பாகத்தில் இதேபோல் அழுத்தமான ஒரு கதாபாத்திரம் இருக்க, அதில் நடிக்க ஸ்ரீதேவியை அணுகியுள்ளதாம் படக்குழு, இந்த முறை தவறவிட மாட்டார் என்று தெரிகின்றது.

Loading...