தீபிகாவா இல்லை காத்ரீனாவா என்று கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை எந்திரன் 2 படத்தின் ஹீரோயின் பற்றி பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்கள் யாரும் இல்லை ஷங்கரின் எந்திரன் 2 வில் மீண்டும் அவரது அபிமான நாயகி எமி ஜாக்சன் தான் நாயகி என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் நாயகி தேடியவர் கடைசியில் எமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்து விட்டாரா என்று மொத்த கோலிவுட்டினரும் தற்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர்.

ஐ படத்தில் எமியின் நடிப்பு ஷங்கரைக் கவர்ந்ததால் இந்தப் படத்திலும் அவரையே ஹீரோயினாக்கி விட்டார் என்று கூறுகின்றனர்.

amy-jackson-600

விரைவில் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எந்திரன் 2 படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமீர்கான் தொடங்கி விக்ரம் வரை பலரின் பெயரும் வில்லனாக நடிக்க பரீசிலிக்கப்பட்டது.

ஹீரோயின் தேர்வில் பாலிவுட்டை விட்டு கோலிவுட்டிற்கு வந்த ஷங்கர் வில்லன் தேர்வில் ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஆமாம் தற்போது எந்திரன் 2 வில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்டிடம் ஷங்கர் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.