சென்னை: டாப் ஸ்டாரிலிருந்து தம்மாத்துண்டு ஜிவி வரை நயன்தாராதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் சூழலில், தனது 60வது படத்துக்கான நாயகியாக நயன்தாரா வேண்டாம் என்று நடிகர் விஜய் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 59 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தனது 60 வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜே சூர்யா இயக்க, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு நாயகியாக நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்யலாம் என்று இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறியபோது பட்டென்று நயன்தாரா வேண்டாம் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று விஜய் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இருவரும் ஏற்கனவே இணைந்து நடித்த வில்லு திரைப்படம் நயன்தாரா வாழ்க்கையில் புயலைக் கிளப்பியது. ஆனால் விஜய்க்கு எந்த பாதிப்புமில்லை.

இன்றைய தேதிக்கு எவரும் தொட முடியாத உச்ச நாயகியாகத் திகழ்பவர் நயன்தான். அவருக்காகவே ஒரு படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடிக்கும் அளவுக்கு ராசி நாயகி. அவரைப் போய் வேண்டாம் என்று விஜய் கூறியது கோலிவுட்டையே புருவம் உயர்த்த வைத்துள்ளது.

இப்படித்தான் விக்ரம் ஒருமுறை நயன்தாராவை வேண்டாம் என்று மறுக்க, இன்றுவரை விக்ரமை வேண்டாம் என்று தவிர்த்து வருகிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் லிஸ்டில் விஜய்யையும் சேர்த்துவிடுவாரோ நயன்?