நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினிகாந்த் படத்தலைப்பில் இதுவரை பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார். மாப்பிள்ளை வெளியீட்டுக்குப் பிறகு ‘இனி ரஜினி சாரின் தலைப்பை என் படங்களில் பயன்படுத்த மாட்டேன்’ எனவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது வேல்ராஜ் இயக்கிவரும் ‘விஐபி 2′ படத்துக்கு இவர் தங்கமகன் என பெயர் சூட்டியுள்ளார். இதுவும் ரஜினி பட தலைப்பே ஆகும். இந்த படத்துக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு என்பதால் இதை பயன்படுத்திக் கொண்டதாக படக்குழு அறிவித்துள்ளது.
thanga-magan-photos-pictures-stills
வழக்கமாக தனது படங்களில் அப்பாவிடம் திட்டுவாங்கும் மகனாக நடித்திருக்கும் தனுஷ் இப்படத்தில் தனது தந்தை பெயர்சொல்லும் பிள்ளையாக நடித்துள்ளாராம். இதில் இவரது தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் தாயாராக ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர்.
Loading...