சின்னத்திரையில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் டிடி. இவரது நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எண்ணற்ற பிரபலங்களை நேர்காணல் செய்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி குளறுபடியால் சில நாட்களாக இவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்தார்.

இதனால் இவர் அந்த தொலைக்காட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு 10 எண்றதுக்குள்ள படத்தின் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி சமந்தாவை பேட்டி கண்டு புதிய வடிவில் மீண்டும் நிகழ்ச்சியை தொடங்கி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிடி.

dd_vikram_samantha001