இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புலி. இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்பதால், அடுத்து அட்லீ படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் எனவிஜய் உழைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு முதலில் மூன்று முகம் என டைட்டில் வைப்பதாக இருந்தது. பின் சில காரணங்களால் அவை கைவிடப்பட்டது.

தற்போது காக்கி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த பெயரில் சரத்குமார் படம் ஒன்று எடுக்கப்பட்டு, பாதியிலேயே நின்றது குறிப்பிடத்தக்கது.