சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்றை அளித்தார், இதில் சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் போன் செய்தார்.

அப்படி போன் செய்து பேசுகையில் ஜாலியாக ஒரு கேள்வி கேளுங்கள் என்று தொகுப்பாளர் கூற உடனே சிவகார்த்திகேயன் ‘ஏன் நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நன்றாக நடித்திருந்தீர்கள்’ என கேட்டார்.

உடனே நயன்தாரா ‘என்ன சிவகார்த்திகேயன் இன்னும் வேலைக்காரன் படப்பிடிப்பு முடியவில்லை, நியாபகம் இருக்கா?’ என்று குறும்பாக மிரட்ட, ஆடியன்ஸிடமிருந்து செம்ம கைத்தட்டல் வந்தது.

Loading...