செகண்ட் ரவுண்டுக்கு அமர்க்களமாக தயாரான கடை வீதி நடிகை, டைரக்டர்களை விட தனது அபிமானத்திற்குரிய சில ஹீரோக்களைத்தான் மலைபோல் நம்பியிருந்தார். அதனால், எப்போதும் போலவே அவர்களுடன் பார்ட்டி வகையறாக்களில் கலந்து கொண்டு குத்தாட்டமெல்லாம் ஆடினார்.

ஆனால் அம்மணியின் அதிரடி குத்தாட்ட பர்பாமென்ஸை ரசித்த நடிகர்களோ, இவர் ரெகமண்டேசன் கேட்டபோது, ரெட் சிக்னல் போட்டு விட்டார்களாம். அம்மணி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தபோது, மேற்படி நடிகர்களின் செல்போன்கள் நிரந்தரமாக சுவிட் ஆப் செய்யப்பட்டதாம்.  இதனால் கொதித்துப்போன கடைவீதி நடிகை, இனியும் கோடம்பாக்கவாசிகளை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்று தனது தாய்மொழி ஹீரோக்களின் புகழ்பாடிக்கொண்டு அவர்களின் அன்புத்தோழியாகி வருகிறார்.