அஜித் சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்கள் வந்துவிட்டது. இவர்களது கூட்டணியில் வந்த படங்களில் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்ட வீரம்.

உண்மையை சொல்ல போனால் அண்மையில் வெளியான விவேகம் படத்தின் சில விஷயங்களில் கொஞ்சம் பிடிக்கவில்லை. எனவே ஒருசில ரசிகர்கள் வெளிப்படையாக விவேகம் 2 இருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்.

வீரம் படம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு படம். எனவே வீரம் 2 இருந்தால் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் என இயக்குனர் காதுக்கு செல்லும் வகையில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது.