விஜய் மெர்சல் பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு நடுவில் விஜய், அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு மூவறும் துபாய் சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அவர்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது திருட்டுப் பயலே என்ற படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை அமலாபால். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

தலைவா படம் நடிக்கும் போது விஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படுவேன், அவர் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பவர். இதனால் காலை 9 மணிக்கு சூட்டிங் வரவேண்டும் என்றால் அவர் 8.30 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். நாங்கள் அனைவரும் விஜய் வந்துவிடுவாரே என்று பயந்து நாங்களும் சீக்கிரமே கிளம்புவோம் என்று கூறியுள்ளார்.