சூப்பர் ஸ்டாரை அவமானப்படுத்திய தமன்னா!

தமன்னா
தமன்னா

தமன்னா தான் தற்போதைய ஹிட் நாயகி. இவர் நடித்த தமிழ், ஹிந்தி என அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைய, தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுளி இயக்கத்தில் பாஹுபலி, மகேஷ் பாபுவுடன் ஆகடு போன்ற படங்களின் வாய்ப்பு கிடைத்தது.

இதில் ஆகடு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் மகேஷ் பாபு படம் என்றால் கூப்பிடாமலே எல்லோரும் விழாவிற்கு வருவார்கள்.ஆனால் படத்தின் நாயகியாக இருந்து கொண்டு இசை வெளியீட்டு விழாவில் தமன்னா கலந்து கொள்ளவில்லையாம், இது மகேஷ் பாபு மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் கோபபடுத்தியுள்ளது.

Loading...