சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் முடிந்தது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், கார்த்திக், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆனால் இதில் நடிகை மீரா மிதுன் முக்கிய ரோலில் நடித்திருப்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்த மீரா மிதுன் நடித்த காட்சிகள் சஸ்பென்ஸாக இருந்தது. சமீபத்தில், மீரா மிதுன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் தான் நடித்ததை உறுதிபடுத்தியிருக்கிறார்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவர் தான் நடிப்பது பற்றிய விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்துவிட்டாராம். இவரது கதாபாத்திரம் இப்படத்தின் ரகசியம் போல் தெரிகிறது. பொங்கல் வரை பொறுத்திருப்போம்.