நயன்தாரா மனசு யாருக்கு வரும், இதுவரை அறியாத தகவலை கூறிய சிவகார்த்திகேயன்!

வேலைக்காரன்
வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வேலைக்காரன் இன்னும் இரண்டு வாரங்களில் திரைக்கு வரவுள்ளது. இதனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சிவகார்த்திகேயனை திரையில் பார்க்க அவருடைய ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்த நிலையில் வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘நயன்தாராவை நான் முதன் முதலாக ஏகன் படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன்.

அதை தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் எங்களுக்காக ஒரு பாடலில் நடனமாடினார், அதற்காக 3 நாட்களுக்கு மேல் எங்களுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஆனால், அந்த பாடலுக்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக அவர் வாங்கவில்லை, அப்போது பார்த்த அதே நேர்மை, நேரம் தவறாமை அப்படியே தற்போது வரை நயன்தாராவிடம் உள்ளது’ என கூறியுள்ளார்.

Loading...