கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் . படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சொடக்கு பாடல், டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியாகிறது. இதுவரை கீர்த்தி அவரின் படங்களுக்கு தானே குரல் கொடுத்து வந்தார்.

ஆனால் இந்த படத்தில் அவர் தன் சொந்த குரலில் பேசவில்லையாம். அவருக்காக டப்பிங் பேசியவர் அக்‌ஷயா. இது பற்றி ஃபேஸ்புக்கில் கீர்த்திக்கு தான் பேசியிருப்பதாகவும், சூர்யாவை சந்தித்ததாகவும் அக்‌ஷயா கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Loading...