விஜய்-முருகதாஸ் அடுத்தப்படம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

விஜய்-முருகதாஸ்
விஜய்-முருகதாஸ்

விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முருகதாஸ் அடுத்து அக்‌ஷய் குமார் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வந்தது.

அப்படம் ஹாலிவுட் படமான மில்லியன் டாலர் பேபி படத்தின் ரீமேக் என கூறப்பட்டது, இதை தொடர்ந்து முருகதாஸ் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்று பெரிய விவாதமே தொடங்கியது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி முருகதாஸ் அகஷய் குமார் படத்தை இயக்குவது உறுதி என்றாலும் அடுத்து அவர் இயக்கப்போவது விஜய் படத்தை தானாம்.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தான் முருகதாஸ் தற்போது தீவிரமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

Loading...