நடிகை மியா ஜார்ஜ் என்றால் ஒரு நாள் கூத்து, எமன் ஆகிய படங்களை சொல்லலாம். இளம் நடிகையான இவர் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார்.

தமிழில் அமர காவியம் படம் மூலம் அறிமுகமானவர் பின் இன்று நேற்று நாளை, ரம், வெற்றிவேல் என சில படங்களில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தில் டாக்டராக நடித்திருந்தார் மியா. தற்போது பரோல் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறாராம்.

இதோடு அவருடன் ஒரு குட்ட நாடன் என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் ராய் லட்சுமி மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படி வரிசையாக மியா மம்முட்டி படங்களில் நடித்து வருவது பலருக்கும் சர்ப்பிரைஷ்.

Loading...