நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சூர்யாவுடன் நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் அஞ்ஞாதவாசி அதை முந்தி ஜனவரி 10 ம் தேதி வரவுள்ளது.

விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்தில் தற்போது கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

மலேசியாவில் வரும் ஜனவரி 5,6 ல் நட்சத்திர கலைவிழா நடைபெறவுள்ளது. இதில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் என இரண்டையும் ரிலீஸ் செய்கிறார்களாம்.

மேலும் விஜய் 62 படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியல் ஆரம்பமாகவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி விஜய்யுடன் நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வருகிறது.

ஒருவேளை இந்த தகவல் உறுதியானால் இம்மாதம் முழுக்க ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவருக்கும் கொண்டாட்டம் தான்.