விஜய்-முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக புதிய படம் மூலம் இணைந்துள்ளனர். துப்பாக்கி, கத்தி படங்களை தாண்டி இப்படம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் இரண்டாவது நாயகியாக சயீஷா கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வந்தன, ரசிகர்களும் தகவலை கொண்டாடினர்.

ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக பொய் என்று கூறியுள்ளார் நடிகை சயீஷா. நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகை, இதை நான் நிறைய முறை கூறியிருக்கிறேன். அவருடன் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், ஆனால் விஜய் 62வது படத்தில் நாயகியாக நடிக்க என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, நான் அப்படத்தில் நடிக்கவில்லை என கூறியுள்ளார்.