தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலாம் ஆனவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலாம் ஆனவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார்.

தற்போது, ஓவியா ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘முனி 4’ (காஞ்சனா 3), ‘K2’ ஆகிய 3 படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் ஓவியா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

90ml
90ml

இப்படத்தை ‘குளிர் 100°’ புகழ் அனிதா உதீப் இயக்குகிறார். இந்த படத்திற்கு ’90ml’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘Nviz எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காதலர் தினத்த்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Loading...